நிறைவேறியது அதிரடி சட்டம் இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்த்தை பெறுகிறது இந்தியா !

நிறைவேறியது அதிரடி சட்டம்
இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றது இந்தியா

Loading...

வாஷிங்டன்:

பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளான இஸ்ரேல், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவை தரம் உயர்த்தும் சட்டத்தை அமெரிக்க செனட் நிறைவேற்றியுள்ளது.

Loading...

இந்த சட்டத் திருத்தம் மனிதாபிமான உதவி, பயங்கரவாத எதிர்ப்பு, கடற் திருட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய பாதுகாப்பு துறைகளில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பை பலமடங்கு அதிகரிக்கும்.

தற்போதைய மசோதா அமெரிக்க காங்கிரஸின் சேம்பர்ஸ் – பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகியவற்றில் நிறைவேறிய பின்னர் முழு சட்டமாக அமல்படுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தினை மேற்கண்ட அவைகளில், இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க-ஹிந்து ஃபவுண்டேசன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியா-அமெரிக்கா நல்லுறவை அதிகரிப்பதில் செனட் உறுப்பினர்களான, கார்னின் மற்றும் வார்னர் எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறோம். “நேட்டோ போன்ற நிலைக்கு இந்தியாவை உயர்த்துவது மிக முக்கியமானது, இப்போது முன்னெப்போதையும் விட, அமெரிக்கா, இந்தியா மற்றும் முழு பிராந்தியத்திற்கும் அதுதான் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் இந்த சட்டத்தை அப்படியே நிறைவேற்றுகிறோமா அல்லது தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் சில திருத்தத்துடன் அதைச் செய்கிறோமா என்பது முக்கியமில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்க-இந்தியா கூட்டணியின் முக்கியத்துவத்தை உறுதியான முறையில் நாங்கள் அங்கீகரிக்கிறோம், ” என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர், ஷெர்மன்.

2016 ஆம் ஆண்டில் இந்தியாவை ஒரு “முக்கிய பாதுகாப்பு கூட்டாளி” என்று அமெரிக்கா அங்கீகரித்தது. இது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பு ஆகும். எதிர்காலத்தில் நீடித்த ஒத்துழைப்பு இரு நாடுகள் நடுவே நிலவுவதையும், இது உறுதி செய்கிறது.

இந்திய பிரதமர் மோடி வெளிநாட்டு கொள்கைகளில் கடைபிடித்த நடைமுறை இந்தியாவின் மதிப்பை உலகளவில் உயர்த்தி இருப்பதாகவும், உலக நாடுகள் அனைத்தும் மதிக்கக்கூடிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*