குறைந்த செலவில் தரமான கல்வி கற்க சிறந்த நாடு இந்தியா !

குறைந்த செலவில் தரமான கல்வி கற்க சிறந்த நாடு இந்தியா !

Loading...

மத்தியில் உள்ள மோடி அரசின் முயற்சிகள் காரணமாக உலகில் மிகவும் ஈர்க்கத்தக்க, செலவு குறைந்த கல்வி மையமாக இந்தியா மாறியுள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.  சென்னை வண்டலூரில் உள்ள பி எஸ் அப்துல் ரஹ்மான் கிரெசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், குறைந்த செலவில் தரமான கல்வி வழங்குவது, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னுரிமையாக உள்ளது என்றார்.

புதிய கல்விக் கொள்கை வலுவான இந்தியாவையும், அதிகாரமளித்தலுக்கு அடித்தளத்தையும் அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  30 ஆண்டுகளுக்குப் பின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது என்று  குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக இது இருக்கும் என்றும் கூறினார்.  விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய கல்விக் கொள்கை, கல்வி முறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

Loading...

2014 ஆம் ஆண்டிற்கு முன் நாட்டில் 16 ஐஐடி-கள் இருந்த நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு புதிதாக 7 ஐஐடி-களைத் தொடங்கியுள்ளது என்றார்.   கடந்த ஐந்தாண்டுகளில் 15 புதிய தகவல் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களும், 7 புதிய இந்திய நிர்வாகவியல் கல்விக் கழகங்களும், 15 புதிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்விக் கழகங்களும் தொடங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

கடந்த ஐந்தாண்டுகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 3 கோடியே 18 லட்சம் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்றும் திரு நக்வி கூறினார்.  அடுத்த ஐந்தாண்டுகளில் ஐந்து கோடி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*