Connect with us

#24 Exclusive

“திரும்பி வந்துடோம்னு சொல்லு”- மீண்டது பொருளாதாரம் ! பிரபல பத்திரிக்கை வெளியிட்ட பரபரப்பு தகவல் ! வல்லுநர்கள் மகிழ்ச்சி !

Published

on

இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி 6.8% வளர்ச்சியை பெரும் என்று பிரபல பொருளாதார நிறுவனமான ப்ளூம்பெர்க் நிறுவனம் கனித்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள், நிதிநிலை ஆலோசகர்கள் இந்த கணிப்பை வரவேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறை மீண்டு வருவதற்கான சமிக்கைகள் நவம்பர் மாதத்தில் தெரிந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதார மந்தநிலையின் காரணமாக நமது பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. இது தற்காலிகமானது தான் என்றாலும் இந்த சிறிய வீழ்ச்சி பெரிய கவலையை கொடுக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.5% என்று சராசரி வளர்ச்சி உள்ளது. இதனால் இந்த சிறிய வீழ்ச்சியும் நமக்கு பெரிதாக தெரிகிறது.

இந்த மந்தநிலையை சமாளிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தைரியமான முடிவுகளை அறிவித்துள்ளார். கார்ப்பரேட் வரி குறைப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை, ஆட்டோமொபைல் துறைக்கும் பல சலுகைகளை அறிவித்தார். இது இந்த மூன்றாம் காலாண்டில் சிறிய முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இதனை மேலும் மேம்படுத்த வருகிற பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகளை அதிரடியாக அறிவிக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகிறது.

Loading...

இந்நிலையில் இந்திய பொருளாதாரம் அடுத்த 2021ம் நிதியாண்டில் 7.1 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதுவே இது 2020ம் நிதியாண்டில் 5.7 சதவிகிதாமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Loading...


இந்த நிலையில் ப்ளும்பெர்க் 2021ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. எனினும் இதற்கு அடுத்த மூன்றாவது காலாண்டில் இது 6 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இதே நான்காவது காலாண்டில் 6.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா சீனா வர்த்தக நிறுவனங்களிடையே வர்த்தக போர் அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. இதனால் மற்ற வெளிநாட்டு முதலீட்டு மாற்றாக இந்தியா மாறக்கூடும் என்றும் கணித்துள்ளது. இதனால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இது குறித்து கோவையை சேர்ந்த நிதிநிலை ஆலோசகர் மற்றும் பேராசிரியர் Dr.சந்திரசேகரன் கூறுகையில், “நவம்பர் 2019 மாதத்துக்கான வர்த்தகப் பற்றாக்குறை 12.12 பில்லியன் டாலராக குறைந்து இருக்கிறது. நவம்பர் 2018-ல் வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2019-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி 11.06 பில்லியன் டாலர் மட்டுமே செய்திருக்கிறார்கள். நவம்பர் 2018-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி 13.52 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் இந்தியா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்” என்று கூறினார்.

ஏற்கனவே நவம்பர் மாதத்திற்கான ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுசூகி விற்பனை 4% மாக அதிகரித்தது. இது போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ இந்தியா பொருளாதாரம் மீண்டு வந்து 5 டிரில்லியன் டாலர் வர்த்தக நாடாக உருவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்போம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending