#Breaking இந்தியா- சீனா இராணுவ வீரர்கள் மோதல் சிக்கிமில் பெண்டு எடுக்கப்பட்ட சீனா வீரர்கள் !

சிக்கிம் பகுதி இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் இடங்களில் ஒன்று இங்கு இரண்டு நாடுகளை சேர்ந்த இராணுவ வீரர்களும் அவ்வப்போது வாய்தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

Loading...

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து இராணுவத்தில் பணியாற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் செய்திகளை பகிர்ந்துள்ளனர், அதன் படி இந்திய வீரர்கள் உடன் சீனா வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்போது இரண்டு தரப்பும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்திய நிலையில் திடீர் என வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளது.

இந்த மோதலில் சீனா வீரர்கள் 90 பேர் இந்திய வீரர்கள் 60 வரை கலந்து கொண்டு ஆயுதங்கள் இன்றி கைகளில் மோதலில் ஈடுபட்டுள்ளனர், இறுதியில் சீனா வீரர்கள் 7 பேருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கடந்த 2017 ம் ஆண்டு சிக்கிம் பகுதியில் சீனா ராணுவத்தினர் எல்லை மீறினர், அப்போதே இந்தியா தரப்பில் இனி அவர்கள் மோதலில் ஈடுபட வந்தால் நைய புடைத்து அனுப்ப நமது இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading...

அதனையடுத்துதான் நேற்று இந்திய வீரர்கள் 60 பேர் 90 பேர் கொண்ட சீனா வீரர்களை விரட்டி அடித்துள்ளனர்,சீனா இனி இந்திய எல்லையில் எல்லை மீறினால் ஒடுக்கப்படுவார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் சீனாவிற்கு செல்லும் எல்லைகளுக்கு இந்தியா இராணுவம் விரைவாக சென்றடையும் வண்ணம் வழித்தடங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் சீனா மீது வெறுப்பில் உள்ள நேரத்தில் இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் அதனை உலக நாடுகளில் 90% ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*