Connect with us

#24 Exclusive

BREAKING இந்தியாவிற்குள் வந்தது கொரனோ வைரஸ் அதுவும் தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் வந்து விட்டது !

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலையகம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் பல்வேறு உலக நாடுகளும் தங்கள் நாட்டில் கொரனோ வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர சோதனையை செய்து வருகின்றனர், இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது, கொரனோ பாதித்த மாணவரை தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொரனோ தொற்று பரவியிருப்பதால் தமிழகம் சுகாதார துறை முழு அளவிலான பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து வருகிறது, மேலும் அனைத்து மாநில எல்லைகளிலும் சோதனை நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

கொரனோ வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன, மேலும் அசைவம் சாப்பிடும்போது நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது, கேரளாவிற்கு கொரானோ வைரஸ் வந்திருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இதுவரை 16 நாடுகளில் கொரனோ தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தவைரஸ் மாற்ற நாடுகளில்
பரவிவிடாமல் இருக்க அனைத்து
நாடுகளிலும் உள்ள சர்வேதேச
விமான நிலையங்களில் சீனாவில்
இருந்து வரும் பயணிகளிடம்
இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்
தாக்கி உள்ளதாக என சோதனை
செய்த பின்னரே தங்கள் நாடுகளில்
அனுமதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending