பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 40 குழுவிற்கு ஆப்பு அடிக்கபட்டது ! அடுத்தது தமிழகம் !

இந்தியாவிற்கு எதிராக செயல்படும் ஊடகங்கள், சமூகவலைத்தள செயல்பாட்டாளர்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை பிரதமர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வசம் ஒப்படைதுள்ளதாகவும், இதனை IIT மாணவர் குழுவினை கொண்டு மாநில வாரியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாம் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். படிக்க -> https://www.tnnews24.com/ajitdoval-indian-news-iit/

Loading...

இன்று அதற்கு வலுசேர்க்கும் விதமாக இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட 40 இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு முடங்கியுள்ளது, இவை மாதத்திற்கு 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட இணையதளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாநிலத்தை குறிவைத்து கலுசிஸ்தான் எனும் தனி நாட்டை உருவாக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்து நிதி அளிக்கப்பட்டுள்ளது, இவற்றில் பெரும்பான்மை இணையத்தளங்கள் பாகிஸ்தான் நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

தற்போது மற்ற மாநிலங்களில் இந்தியாவிற்கு எதிராக தேச விரோத கருத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஆதாரத்துடன் திரட்டும் பணியும் அவர்களது வங்கி விபரங்களை ஆராயும் பணியும் தொடங்கிவிட்டது என்றும் இந்த மாத இறுதிக்குள் நாட்டில் பல்வேறு இணையதளங்கள் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்படுவதுடன் பலர் கைது செய்யபடலாம் என கூறப்படுகிறது.

இவற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த நபர்கள் அதிக அளவில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொறுப்பு ஒப்படைத்து 24 மணி நேரத்திற்குள் 40 குழுவிற்கு ஆப்பு அடிக்கப்பட்டது விரைவில் தமிழகத்திலும் இதே போன்ற நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது, இந்த செய்தி வெளியான நிலையில் பலர் சமூக வலைத்தளங்களில் இந்தியாவிற்கு எதிராக பதிவிட்ட கருத்துக்களை உடனடியாக அளித்து வருகின்றாரம்.

ஆதாரம் :- https://www.google.com/amp/s/m.timesofindia.com/india/govt-blocks-40-websites-of-sikhs-for-justice-foils-voter-registration-bid/amp_articleshow/76799591.cms

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3936 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*