Connect with us

#24 Exclusive

குடியரசுதினவிழாவில் கலந்து கொள்ளப்போகும் வெளிநாட்டு அதிபர் யார் தெரியுமா? அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள் !!

மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் இதுவரை சுதந்திரத்தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவிற்கு வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அந்த நாடுகளிடம் நட்புறவை பல படுத்தி வருகிறது, அந்த வகையில் இந்த முறை தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாடாளுமன்ற தேர்தலில் தனது கூட்டணி எதிர்தரப்பான இடதுசாரி தொழிலாளர் கட்சியை (பி.டி) தோற்கடித்த பின்னர், 2019 ஜனவரியில் தீவிர வலதுசாரி தலைவரான மெசியாஸ் போல்சொனாரோ ஆட்சிக்கு வந்தார், இடதுசாரிய சித்தாந்தத்தை கடுமையாக எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளில் முக்கிய கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறார் மெசியாஸ் போல்சொனாரோ, ஓரின சேர்க்கையை கடுமையாக எதிர்க்க கூடிய சித்தாந்தம் கொண்டவர்.

உலகம் முழுவதும் தற்போது வலதுசாரிய தலைவர்களை ஒன்றிணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும், அதன் மூலம் தன்னை உலக நாடுகள் மத்தியில் முன்னிலை படுத்த இந்தியா விரும்புவதாகவும் கூறப்படுகிறது, மேலும் இடதுசாரிய சித்தாந்தத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் பிரேசில் அதிபர் விழாவில் கலந்து கொள்வதை கம்யூனிஸ்ட்கள் ரசிக்கவில்லை என்றும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியாவின், 71வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார். இதற்காக, வரும், 24ம் தேதி டில்லி வரும் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அவருக்கு, 25ம் தேதி, ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார்.

Loading...
Brazil president and his wife

இந்தியா – பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்திலும், மெசியாஸ் பங்கேற்க உள்ளார். இத்துடன் மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 27ம் தேதி பிரேசில் திரும்புகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வலதுசாரிய சிந்தனை கொண்ட தலைவர்கள் ஒன்றிணைவது இடதுசாரிய, நடுத்தர சித்தாந்தம் பேசுபவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக இடதுசாரிகளை அதிகம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது எனலாம் எப்படி என்றால் இப்போதே தங்கள் பத்திரிக்கையில் பிரேசில் அதிபருக்கு எதிராக இந்தியா மெசியாஸ் போல்சொனாரோவை அழைப்பது சரியா என கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டார்களே.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending