உலகில் பொருளாதாரம், நிதி சக்தி வலிமை அரசியல் ஆளுமை உள்ள நாடு இந்தியா, ஐநாவில் நிரந்தர உறுப்பினராக ரஸ்யா ஆதரவு ! விட்டதை பிடிக்கும் இந்தியா !!

அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன, இதன் மூலம் இவற்றிற்கு மிக பெரிய அதிகாரமான வீட்டோ அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, சீனா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை பலவற்றை இந்த வீட்டோ அதிகாரம் மூலமே தடுத்து நிறுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், உலகின் புவிசார் அரசியலை நிர்ணயிக்கும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என்றும் கூறிய அவர் உலகில் பொருளாதார வலிமை உள்ள நாடு என்றும், நிதி வலிமை உள்ளது என்றும் கூறிய அவர் இந்தியா ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவது காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரசியாவின் இந்த அறிக்கை உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு என்னவென்று உணர்த்தியிருப்பதாகவும், முன்பு உலக நாடுகள் இந்தியாவின் மேல் வைத்திருந்த எண்ணம் மாறி தற்போது உலக அளவில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், இந்திய சந்தை மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட பல மாறுதல்களால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading...

இந்தியாவிற்கு எதிராக சீனா தனது ஆளுமையை காட்டிவரும் நிலையை ஐ நாவில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றால் அது இந்தியர்களுக்கு மிக பெரிய வாய்ப்பாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது, இதற்கு முன்னர் ஐ நா வின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதும் தற்போது ரஷியா மீண்டும் தனது ஆதரவினை அறிக்கையாக வெளியிட்டுருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் சீனா இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடாக ஆதரவு தெரிவிக்காது என்றும் ஆனால் இந்திய சந்தையில் சீனாவின் வர்த்தகத்தை நிறுத்தினால் சீனா தானாக வழிக்கு வரும் என்று இந்தியா திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3883 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*