Connect with us

#24 Exclusive

வின் டிவியில் இருந்து மதன் விலகல்! காரணமென்ன?

மதன் ரவிச்சந்திரன் சிறிய காலத்தில் சட்டென்று தனது கேள்விகள் மூலம் நேரடியாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார் என்றே சொல்லவேண்டும் தனது நேரடியான கேள்விகளின் மூலம் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகளிடம் தவறினை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பார் அதற்கு பலர் பதில் கூற முடியாமல் பாதியில் சென்ற வரலாறுகளும் உண்டு.,

அந்த வகையில் மதன் வீரமணி, சுபவீ, திருமாவளவன், நாஞ்சில் சம்பத், பாதிரியார் கஸ்பர், சமீபத்தில் கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன் ஆகியோர்வரை பேட்டி எடுத்தார் இந்த நிலையில் பாதிரியார் கஸ்பருடன் நடத்திய நேர்காணலை ஒளிபரப்பக்கூடாது என அவர் நேரடியாக வின் தொலைக்காட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள நிர்வாகம் மறுத்து வெளியிட்டது, அதனையடுத்து கம்யூனிஸ்ட்கள் பற்றிய விவாதத்தையும் பெரியார் கம்யூனிஸ்ட்களை நாய் என்று விமர்சனம் செய்ததை நேரடியாக ஜி. ராம கிருஷ்ணனிடம் கேட்க அதற்கு மிக பெரிய அளவில் உள்ளுக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த இரண்டு சம்பவங்கள்தான் மதனுக்கு எதிர்ப்பை கொடுத்துள்ளன, அத்துடன் கிஷோர் கே ஸ்வாமியின் கடந்த கால வரலாறுகளை எடுத்து மதன் நேரலையில் சொல்லியது இருவருக்குமான நட்பில் விரிசலை உண்டாக்கியது, பலரும் கடந்த காலங்களில் மாற்று நிலைப்பாட்டினை கொண்டவர்கள்தான் அதுபோல் தானும் ஒருவன் என்று கிஷோர் பேசியிருந்தார், மேலும் நான் தற்போது மாற்றி பேசும் விஷயங்களில் உண்மை இருக்கிறதா என பார்க்க வேண்டுமே தவிர உள் அர்த்தத்தை பார்க்க வேண்டாம் என கிஷோர் நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார்.

Loading...

மக்கள் மனநிலை மாறுவது இயல்பு ஆனால் அதன் மூலம் தான் ஆதாயம் அடைந்ததாக கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார், இந்த சூழலில் மதன் நேற்று சமூகவலைத்தளத்தில் பதிந்த பதிவு கிஷோரை விமர்சனம் செய்வதாக இருந்ததாக கூறப்படுகிறது, 28 வயதில் கிட்டத்தட்ட உச்சம் அடைந்த மதன் போன்றோர் தங்கள் அனுபவத்தை காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளன.

Loading...

இந்நிலையில் தான் வின் டிவியில் இருந்து விலக போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் மதன் தெரிவித்துள்ளார், பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சியின் தலைவர் தேவநாதன் அவரது தொலைக்காட்சியில் இருந்து மதன் விலகுவதற்கு என்ன கரணம் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

விரைவில் இதற்கான நேரடி காரணத்தை பதிவிடுகிறோம் !

©TNNEWS24

Loading...

Trending