Connect with us

#24 Exclusive

ரயில் பயணத்தின்போது திருட்டு நடந்தால் இனி நீங்கள் லட்சாதிபதி ஜப்பானை தொடர்ந்து அசத்தல் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது மோடி அரசு

Published

on

ரயில் பயணத்தின்போது திருட்டு நடந்தால் இனி நீங்கள் லாட்சாதிபதி ஜப்பானை தொடர்ந்து அசத்தல் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது மோடி அரசு

புது டெல்லி.,

நாடு முழுவதும் போக்குவரத்து நடவடிக்கைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது, அந்த வகையில் நடைமுறையில் இல்லாத காப்பீட்டு திட்டத்தை ரயில்களில் பயணம் செய்பவர்களுக்காக அறிமுகம் செய்தது, ரயில் பயணத்தின் போது விபத்து அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பயணிக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் அவரது குடும்பத்திற்கு பணம் கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது புது வகையான காப்பீட்டு திட்டத்தை இலவசமாக வழங்கியுள்ளது மத்திய அரசு, அதாவது தேஜஸ் ட்ரைனில் பயணம் செய்யும்போது பயணிக்கு விபத்தோ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்பட்டால் 25 லட்சம் வரை பணத்தினை காப்பீடு நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு பெற்று தரும். அதே வேலையில் ரயிலில் திருட்டோ அல்லது நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் நேரத்தில் உங்கள் வீட்டில் திருட்டோ அல்லது தீ பிடித்தல் போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கும் இந்த காப்பீட்டின் மூலம் 1 லட்சம் வரை கிடைக்கும்.

இது வரை பயணத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்திற்கோ மட்டுமே நிதியுதவி கிடைக்கும் ஆனால் தற்போது ரயிலில் திருட்டு போன பொருள்களுக்கும், அதேபோல் பயண நேரத்தில் வீட்டில் திருட்டு நடந்தால் அதற்கும் சேர்ந்து இழப்பீடு வழங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறை. இந்த திட்டம் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று திட்டத்தை அறிமுகம் செய்த ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் தேஜஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை விரைவில் அனைத்து ரயில்களுக்கும் விரிவு படுத்த இருப்பதாகவும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் இதுபோன்ற திட்டம் ஜப்பான் நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த திட்டம் தொடங்கியிருப்பது நெடுதூரம் பயணம் செய்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

©TNNEWS24

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share