Connect with us

#24 Exclusive

இன்று பாண்டே பிறந்தநாள் வெளியான முக்கிய அறிவிப்பு ! நீண்டநாள் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி !

சமூகவலைத்தளம் :- சாணக்யா இணைய ஊடகத்தின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டே இன்று 44 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார், அவருக்கு சமூகவலைத்தளங்களின் மூலம் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் சினிமா, அரசியல் தலைவர்களை தாண்டி ஒரு பத்திரிகையாளர் தனது பெயரை மக்கள் மனதில் பதிவு செய்வது சாதாரண காரியமல்ல அதிலும் குறிப்பாக, திராவிட பெரியாரிய சித்தாந்தம் கொண்ட தலைவர்களை நேரடியாக கேள்வி கேட்டுவிட்டு தமிழக ஊடகங்களில் பணியாற்ற முடியாது அந்த அளவு ஊடகத்துறையில் அவர்களது ஆதிக்கம் இருக்கும்.,

ஆனால் பாண்டே தனது எளிமையான கேள்விகளின் மூலமும் அனைத்து தரப்பினர் மனங்களில் எழும் கேள்விகளை தனது கேள்விகளாக எதிரொலித்தார், இதனால் மற்ற ஊடாகவியலாளர்கள் பெறாத பெயரை பாண்டே பெற்றார், இந்நிலையில் பாண்டே தனியார் தொலைக்காட்சி பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், அதிரடியாக இணைய ஊடகம் சாணக்யாவை தொடங்கி நடத்தி வருகிறார், மேலும் வேந்தர் தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறார்.

Loading...

என்னதான் பாண்டே இணைய ஊடகங்களில் வழியே மக்களை சந்தித்தாலும், முக்கியமான அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றில் பாண்டேய்வின் கருத்தை பலரும் எதிர்பார்த்தனர், மேலும் வழக்கம்போல் விவாத மேடைகளில் பாண்டே வரவேண்டும் என்றும் தினமும் நேரடி விவாதங்களை நடத்த வேண்டும் என்று நேரடியாக அவரிடமே கோரிக்கை விடுத்துவந்தனர்.

Loading...

இந்நிலையில்தான் விரைவில் பாண்டே அவரது பாணியில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டாராம், தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் அதுபோல் தை திருநாளில் மீண்டும் பழைய பாண்டேவாக அரசு கேபிள், டிடிஎச் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்புகள் மூலம் சாணக்யா வர இருப்பதாகவும் அன்று முதல் பாண்டே நேரடியாக மக்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை பலரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், இன்றைய தமிழக ஊடக அரசியலில் ஒருவர் நீந்தி வருவதே மிக பெரிய வெற்றி என்றும் அதிலும் கொள்கை நடுநிலையை இழக்காமல் இருப்பது சாதனை என்றே கூறலாம். தை முதல் பாண்டே இனி மீண்டும் அதிரடியாக களம் இறங்குகிறார்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending