ராக்கி பாய்க்கு பில்டப் கொடுக்க போவது யார் ? கே ஜி எப் 2 வில் இருந்து விலகிய நடிகர் !

ராக்கி பாய்க்கு பில்டப் கொடுக்க போவது யார் ? கே ஜி எப் 2 வில் இருந்து விலகிய நடிகர் !

ராக்கி பாய்க்கு பில்டப் கொடுக்க போவது யார் ? கே ஜி எப் 2 வில் இருந்து விலகிய நடிகர் !

கேஜிஎப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய ஆனந்த் நாக் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியுள்ளார்.

கேஜிஎப் திரைப்படம் கடந்த ஆண்டு கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரிலீஸாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் நாயகனாக யஷ் நடிக்க, பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கினார். இதன் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

Loading...

கேஜிஎப் படத்தின் நாயகனாக ராக்கியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதி அவனது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கதாபாத்திரத்தில் படத்தில் நடித்திருப்பார் ஆனந்த் நாக். ராக்கியைப் புகழ்ந்து இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் இப்போது மீம்களாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு அவரது வசனங்கள் ரசிகர்களிடையே சென்று சேர்ந்தன.

Loading...

இப்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் திடீரெனபடத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இயக்குனர் பிரசாந்த் நீல் அந்த கதாசிரியர் கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் இப்போது ஆனந்த் நாக்குக்கு பதிலாக இப்போது வேறு ஒரு நடிகரைத் தேடிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *