Connect with us

#24 Exclusive

2019 ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது 3 விருதுகளை தட்டி தூக்கிய இந்திய வீரர்கள் ,

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைத்தது ஒரே சோகம் என்னவென்றால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனது தான் , கடந்த ஆண்டில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல பிரிவுகளில் ஆண்டுக்கு ஒருமுறை விருது வழங்கி வருகிறது ஐசிசி

அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் இன்று வெளியானது அதில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர் . இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் பெண் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை வெல்ல பெண் ஸ்டோக்ஸ் முக்கிய காரணம் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருது ஆஸ்திரேலிய வீரர் பேட் கும்மின்சுக்கு வழங்கப்பட்டுள்ளது , இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கட்டில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது , இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிகட்டர் விருது இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு கிடைத்துள்ளது இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது , உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்தரகாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது ,

Loading...

மேலும் இந்த ஆண்டின் சிறந்த மனஉறுதி கொண்ட வீரர் என்ற விருது விராட் கோலிக்கு கிடைத்துள்ளது இந்த ஆண்டின் சிறந்த T20 பர்பாமர் விருது இந்திய இளம் வீரர் தீபக் சஹாருக்கு கிடைத்துள்ளது வெறும் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கட்டுகளை வீழ்தியதற்காக .

Loading...

வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருது ஆஸ்திரேலிய இளம் வீரர் மார்கஸ் லம்புசனேவுக்கு கிடைத்துள்ளது , இந்த ஆண்டு இந்திய வீரர்களே அதிக விருதுகளை பெற்றுள்ளனர் அது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Loading...

Trending