மனைவியைப் பிரிந்த ஹ்ருத்திக் ரோஷன் – கொரோனாவால் மனைவியுடன் இப்போது ஒரே வீட்டில் !

மனைவியைப் பிரிந்த ஹ்ருத்திக் ரோஷன் – கொரோனாவால் மனைவியுடன் இப்போது ஒரே வீட்டில் !

Loading...

மனைவியை விவாகரத்து செய்த ஹ்ருத்திக் ரோஷன் இப்போது கொரோனா பீதி காரணமாக மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்நிலையில் கொடூரமான இந்த கொரோனா வைரஸ்  விவாகரத்து பெற்ற பாலிவுட் ஜோடியான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சுஷானே ரோஷன் ஆகியோர் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளார். ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் இருவரும் படங்களில் சேர்ந்து நடித்த போது இருவரும்காதலிப்பதாக செய்திகள் பரவியது.

இதனால் ஹ்ருத்திக் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை எழுந்து  விவாகரத்து செய்து கொண்டு சுஷான்னே தங்கள் இரு மகன்களோடு தனியாக சென்று வசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் கங்கனாவுக்கும் ஹ்ருத்திக்குக்கும் இடையே பிரச்சனை எழுந்து பிரிந்தனர். இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மகன்கள் தனிமையில் இருபப்தைத் தவிர்க்கும் பொருட்டு தன் கணவரின் வீட்டுக்கு வந்துள்ளார் சுஷான்னே ரோஷன். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*