Connect with us

#24 Exclusive

எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கைதாவார் என்று H ராஜா சொல்லி முழுசா ஒரு நாள் முடிவதற்குள் அடுத்த விக்கெட் அவுட் !

டெல்லி.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்பு மீடியாக்களில் சில தகவல்களை சொல்லுவார் குறிப்பாக R. k நகர் இடைத்தேர்தலில் தொடங்கி வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரை தமிழிசை கூறிய கருத்துக்கள் அப்படியே நடந்தது தேர்தலும் நிறுத்தப்பட்டது.

தற்போது தமிழிசை இல்லாத இடத்தை பாஜக தேசிய செயலாளர் H ராஜா கையில் எடுத்துள்ளார், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த H ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தார், சிதம்பரம் முன்னெடுத்த ஊழல் நடவடிக்கையால்தான் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய பாதிப்பு என்று பேசிய அவர் விரைவில் தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கைதாவார் என்றும் சொல்லியிருந்தார்.

Loading...

Loading...

H ராஜா ஏதோ அரசியல் பழிவாங்கும் நோக்கில் அல்லது எதிர்கட்சிகளை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார் என்று பல்வேறு ஊடகங்களும், அரசியல் கட்சியினரும் சொல்லிவந்தனர் ஆனால் அது இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று யாரும் நினைக்கவில்லை, 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த ஆ ராசா மற்றும் கனிமொழி மீது மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, கடந்த முறை ராசா மற்றும் கனிமொழியை நீதிமன்றம் ஊழல் செய்யாதவர்கள் என்று சொல்லி விடுதலை செய்யவில்லை, தினமும் சிபிஐ ஆதாரத்தை தருவார்கள் என்று காத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த ஆதாரத்தையும் கொண்டு வரவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஆனால் தற்போது இருவர் மீதான குற்றச்சாட்டில் பல்வேறு ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றி இருப்பதாகவும், வருகின்ற புதன் கிழமை நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க இருப்பதாகவும் செய்திவெளியாகி உள்ளது, இதனை உறுதி செய்யும் விதமாக பாஜக முக்கிய தலைவரும் தேசிய செய்தி தொடர்பாளருமான அஸ்வின்குமார் உபாத்யாயா நாடுமுழுவது மிக பெரிய ஊழல்வாதிகள் 5 நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

அஷ்வினி குமார் பாஜக செய்தி தொடர்பாளர்

அந்த வகையில் அந்த இருவர் 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனிமொழி மற்றும் ஆ ராசா என்றே திமுக வினர் கலக்கத்தில் உள்ளனர், இதற்கு முன்னர் பா சிதம்பரம் திகார் சிறையில் அவரது பிறந்தநாளின் போது உள்ளே இருப்பார் என்று அஸ்வினிகுமார் உபாத்யாயா தெரிவித்தது அப்படியே நடந்திருப்பதால் விரைவில் கனிமொழி மற்றும் ராசா கைது செய்யப்படுவார்கள் என்று அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர்.

எது எப்படியோ ஊழல்வாதிகள் சிறைசெல்வார்கள் என்று H ராஜா சொல்லி ஒரு நாள் முடிவதற்குள் அடுத்த விக்கெட் விழுந்திருப்பது இந்திய அளவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending