தமிழகத்திற்கு புதிதாக மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் குஷியில் பாஜக மற்றும் அதிமுகவினர் !

BREAKING தமிழகத்திற்கு புதிதாக மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் குஷியில் பாஜக மற்றும் அதிமுகவினர் !

Loading...

டெல்லி.,

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது, மேலும் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் பங்கு அளிக்கப்பட்டது.

Loading...

இதில் மாற்றமாக நிதிஷ் குமார் தலைமையிலான எம் பி கள் மட்டும் மத்திய அமைச்சரவையில் பங்கேற்காமல் ஒதுங்கினர், தென் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் முக்கிய கூட்டாளியான அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே மக்களவை எம் பி யான op. ரவீந்திரநாத் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அணியினர் இடையே ஏற்பட்ட அதிகார மோதலின் காரணமாக தள்ளி போனது, தற்போது பாஜக மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, இதில் தமிழகத்தில் பாஜக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம் பி ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்க தீர்மானிக்க பட்டுள்ளதாகவும், மேலும் பாஜக தேசிய செயலாளர் H ராஜாவிற்கு மத்திய அமைச்சரவையில் அவரது முயற்சியை பாராட்டி மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு இடம் அளிக்க இருப்பதாகும் நமக்கு பிரத்தியேக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இருப்பதால் தமிழகத்தை சேர்ந்த பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தகவல் டெல்லியில் இருந்து நமது சிறப்பு செய்தியாளர் முகில்வாணி. A

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*