மிக எளிய முறையில் முகத்தில் தோன்றும் மருக்களை நீக்குவது எப்படி?

மிக எளிய முறையில் முகத்தில் தோன்றும் மருக்களை நீக்குவது எப்படி?

Loading...

சிலருக்கு முகத்தில் மருக்கள் காணப்படுகிறது. இதனால் அழகான முகம் கூட அசிங்கமாக காட்சியளிக்கும்.இந்த மருக்கள் முகத்தில் மட்டுமல்லாமல் கழுத்துப்பகுதி, கால் பகுதி, அக்குள் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. இந்த மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். இவை பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சந்தித்து வரும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இது நம் உடம்பில் வந்துவிட்டால் பயப்பட தேவை இல்லை. இது வலி எதுவும் ஏற்படுத்தாது. ஆனால் இது முகத்தில் இருப்பதனால் நம் அழகையே கெடுத்துவிடுகிறது.

இதற்கான தீர்வினை நம் வீட்டில் காணலாம். அதுவும் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு. இந்த மரு இருந்த இடமே தெரியாமல் போய் விடும். தழும்புகளும் இருக்காது. வாழைப்பழ தோலை கொண்டு மருக்கள் உள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர மருக்கள் மறையும். அல்லது வீட்டில் உள்ள தேவையான பொருள்கள் ஆன வெற்றிலை, சிறிதளவு சுண்ணாம்பு,எலுமிச்சை பழம் பாதி அளவு மற்றும் வாஸ்லின்.

Loading...

சிறிதளவு சுண்ணாம்பினை ஒரு மூடியில் எடுத்துக்கொள்ளுங்கள் இதனுடன் ஒரு ஐந்து சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து இரண்டினையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். மரு உள்ள இடத்தில் முதலில் வாஸ்லின் அல்லது தேங்காய் எண்ணெய்யை கொண்டு தடவவும். பெண்கள் முகத்தில் ஆண் போன்று முடி உள்ளதா? இனி கவலை வேண்டும் !! தடவிய பின் சுண்ணாம்பு மற்றும் எலுமிச்சை சேர்ந்த கலவையை மருவின் மேல் வைக்க வேண்டும். மருவின் மேல் இந்த கலவையை வைப்பதற்கு வெற்றிலையின் காம்பினை பயன்படுத்த வேண்டும். மருவின் மீது மட்டும் வைப்பதற்காக இந்த வெற்றிலை காம்பினை பயன் படுத்துகின்றோம். வெற்றிலை காம்பினால் சுண்ணாம்பு மற்றும்

எலும்பிச்சையின் கலவையை மருவில் வைத்தபின் ஒரு செலோடேப்பினை கொண்டு அதன் மேல் ஒட்டி விட வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் விரைவில் மருக்கள் உதிர்ந்து விடும். மருவை தவிர இந்த கலவை மற்ற இடங்களில் வைத்து விட கூடாது என்பதற்காக இந்த செலோடேப்பினை ஒட்டுகின்றோம். இதனை இரவினில் தடவி கொண்டு நாளை மறுநாள் பார்த்தல், இந்த மரு லேசாக ஆட ஆரவித்து விடும். இதனால் தொடர்ந்து செய்து வருவதன் மூலம்

மருவினை நீக்கி விடலாம். ஒருவாரத்திலேயே மருக்கள் நீங்கி அழகான முகத்தினை பெறலாம். அல்லது சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும். சுண்ணக்கட்டி அல்லது பச்சை உருளைக்கிழங்குத் துண்டு போன்றவற்றை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால், மருக்கள் நீங்கப் பெறும்

இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை இரவில் படுக்கும் போது மரு உள்ள இடத்தில் தடவி வைத்து மரு நாள் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவில் மருக்கள் மறைந்து விடும். தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*