கிருமிநாசினி தட்டுப்பாடா? வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

கிருமிநாசினி தட்டுப்பாடா? வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

Loading...

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கிருமிநாசினிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

அதுமட்டுமில்லாமல் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், அடிக்கடி கிருமிநாசினிகள் கொண்டு கைகழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சானிட்டைசர்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்படியே கிடைத்தாலும் விலை அதிகமாக விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்கும் முறையை விளக்கியுள்ளார்.

அதன்படி  ’320 கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும், சிறிதுநேரத்தில்பிளீச்சிங் பவுடர் அடியில் தங்கவும் தெளிந்த நீரை சேமித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒன்பது லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம்.இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு ஒன்பது லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*