Connect with us

#24 Exclusive

சுவையான காரட் சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்!!!

Published

on

குழந்தைகளுக்கு காரட், அப்படியே அல்லது பொரித்து கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதை சட்னிபோல் செய்து கொடுத்தால் சாப்பிடுவதுடன் சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.

முதலில் இதற்கு தேவையானவை :கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, காரட், தேங்காய் சிறிதளவு

Loading...

முதலில் கடாயை அடுப்பில் காயவைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு இரண்டு ஸ்பூன், உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன் காய்ந்த மிளககாய் ஐந்து போட்டு வருக்கவேண்டும். பிறகு இரண்டு பெரியவெங்காயம், நறுக்கி கடாயில் போட்டு வதக்கவும். பூண்டு பத்து பல், தக்காளி இரண்டு நறுக்கியது போட்டு வதக்கவும். பிறகு தேங்காய் ஒரு சில் எடுத்து அதை சிறிதாக கீறி அதனுடன் போட்டு வதக்கவும்.

Loading...

அரை பதத்திற்கு வதங்கியவுடன் இரண்டு காரட்டை பொடியாக நறுக்கி அதில் போடவேண்டும். பச்சைவாசம் போகும்வரை வதக்கவும். பின் இறக்கி ஆறவைத்து அவற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும். பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கால்ஸ்பூன், கருவேப்பிலை சிறிது, காய்ந்த மிளகாய் ஒன்று, சிறிது பெருங்காயம் போட்டு தாளித்து அதில் அரைத்த சட்னியை போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending