முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

Loading...

தமிழகத்தில் கொரோனா நிவாரண செலவுகளுக்காக முதலமைச்சர் நிதி கேட்டு இருந்த நிலையில் இதுவரை வசூலான தொகை எவ்வளவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 81, 000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4789 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதே போல பிரதமர் நிவாரண நிதிக்கும் மக்கள் நிதியுதவி செய்யும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் வரை அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை எவ்வளவு தொகை வசூலாகியுள்ளது என்ற விவரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏப்ரல் 2 வரை மொத்தமாக 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் பின்னான 4 நாட்களில் நான்கு நாட்களில் 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 80 கோடி ரூபாய் வரை நிவாரணமாக வந்து சேர்ந்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*