எத்தனை முறையா இதே கேள்வியை கேட்பீர்கள் வெளுத்து வாங்கிய பாண்டே !

சமூகவலைத்தளம் :- சாணக்யா இணையதள ஊடகத்தின் நிறுவனரும் வேந்தர் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியுமான பாண்டே சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அயோத்தி தீர்ப்பு விவகாரம், சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது, மிசா விவகாரம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டது.

Loading...

இதற்கு பாண்டே அளித்த பதில் தற்போது பல ஆண்டுகளாக பொய் செய்தியை பரப்பிவந்த பெரியாரிஸ்ட்களுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது, சிறிது மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாண்டேவிடம் ஒருவர் இந்த காலத்தில் பலரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதால் என் சமுதாயமே இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையாக இருக்கிறது..,

இதற்கு என்ன செய்வது என்று கேட்டிருந்தார், அதற்கு பாண்டே எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறு வயதில் தங்கள் சமூகத்தின் வரலாறு உள்ளிட்டவைகளை சொல்லி வளர்த்தால் அவர்களுக்கும் பிடிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார், இது அனைத்து சாதிக்கும் சேர்த்துதான் எந்த சாதியையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் கூறியிருந்தார்.

Loading...

இதுகுறித்து பத்திரிகையாளர் பாண்டேவிடம் நீங்கள் சுய சாதி பெருமை பேச சொல்கிறீர்களே ஒரு காலத்தில் ஆண்ட சாதி எனும் பார்ப்பனர்களால் செருப்பு கூட போடமுடியாத நிலை இருந்தது அவர்கள்தான் மனிதனை வர்ணாசிரமம் படி தலையில் இருந்து பிறந்தவர்கள், நெற்றி, கால் என பிரித்து வைத்திருந்தார்கள் என கேள்வி கேட்க பாண்டே கடுமையான பதிலடியை கொடுத்தார்.

எப்போதும் கீதையில் பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் பிரிக்கப்படவில்லை, தொழிலின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது என்றும் இது குறித்து பெரியாரிஸ்ட்களுக்கு என்ன தெரியும் என்றும் வெளுத்து வாங்கிவிட்டார், பாண்டேவின் பதிலடி தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பிராமணர்கள் பெயரை வைத்து சூத்திரர் என பிரிவினை இருப்பதாக கூறிவரும் வீரமணி போன்றோருக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி என்றே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ பின்வருமாறு :-

(பாண்டேவிடம் வர்ணாசிரமம் குறித்து பலமுறை இதற்கு முன்னர் கேள்வி கேட்கப்பட்டதும் அதற்கு அவர் பதிலளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. )

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*