இந்த டிப்ஸை ஒரு முறை பார்த்தால் போதும்!! இனி நீங்கள் தான் சமையல் கிங்!

இந்த டிப்ஸை ஒரு முறை பார்த்தால் போதும்!! இனி நீங்கள் தான் சமையல் கிங்!

Loading...

உணவு மற்றும் சமையற்கலை கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சிலருக்கு சமைப்பத்தில் ஆர்வம் இருக்கும், இருப்பினும் அவருடைய சமையலில் ஏதோ ஒன்று குறை இருந்து கொண்டே இருக்கும். அந்த குறையை சரி செய்ய சிறு சிறு டிப்ஸ் உள்ளது, அவை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தினால் நீங்கள் தான் சமையல் கிங். தற்போது 10 வகையான சமையல் டிப்ஸ் இதோ:


1)முதல் டிப்ஸ் ஆக சிலர் பயன்படுத்தும் கோதுமை மாவில் சிறு சிறு வண்டுகள் வரும், அவை வந்தவுடன் மாவை உபயோகப்படுத்தாமல் கீழே கொட்டி விடுவார்கள். அவ்வாறு மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

Loading...

2)சப்பாத்தி மென்மையாக இருக்க சப்பாத்தி மாவை கலக்கும் போது 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கவும் அல்லது சுடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். 3) சிலர்க்கு இறாலை உரித்துக் கழுவியதும், கொஞ்சம் இறாலின் மீது ஒரு வகையான வாடை வரும். அவை வராமல் தடுக்க மோரில் சிறிது நேரம் ஊறவிட்டால், இறாலின் நாற்றம் குறைந்து விடும். அதன் சுவையும் நல்ல இருக்கும்.

4) இறால் பஜ்ஜி செய்யும் போது பஜ்ஜி மாவுடன் மைதா சேர்த்தால் இறால் பஜ்ஜி சுவையாகவும் மற்றும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். இந்த டிப்ஸ் அனைத்து பஜ்ஜிகளுக்கும் பயன்படுத்தலாம்.

5)பெரும்பாலும் சமையலில் உப்பு பயன்படுத்துவதில் மிகவும் கவனம் வேண்டும். அதில் சிறிதளவு உப்பு அதிகமாக இருந்தால் கூட அதன் ருசி மாறி விடும், தற்சமயங்களில் குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் அவற்றை சரிசெய்ய பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவை பாலில் கலந்து குழம்பில் சேர்த்தால் உப்பின் அளவை சரி செய்து விடும்.

6) அதேபோல் பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், சிறுது தேங்காயைத் துருவிச் சேர்த்தால் உப்பு குறைந்து விடும். அதன் சுவையும் கூடும். 7) தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சிறிது புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி அதை எண்ணெயில் தொட்டு தோசை கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
8) கோடை காலங்களில் தோசை மாவு விரைவில் புளிப்பு தன்மை உண்டாகும். சில நேரங்களில் தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிகமாக தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே நிற்கும் தண்ணீரை வடித்துவிட்டு தோசை ஊற்றி சாப்பிட்டால் புளிப்பு இல்லாமல் சுவையாக இருக்கும்.

9)ஃப்ரிட்ஜில் ஒரு நாளுக்கு மேல் மீனை கெடாமல் வைத்திருக்க மீனை சுத்தம் செய்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் மற்றும் வினிகர் தடவி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும். 10)இட்லிப்பொடி தயார் செய்யும் போது சிறிது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து,இட்லிப்பொயுடன் சேர்த்தால் நல்ல மணமாகவும் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகவும் இருக்கும். பட்டத்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் மாஸ்டர் படம்!! தயாரிப்பாளரின் அதிரடி முடிவு!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*