Connect with us

#24 Exclusive

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை ! காரணம் என்ன?

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததை தொடர்ந்து வனத்துறை மூலம் அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து 10 கிராமங்களை சுற்றியும் வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு
மற்றும் ஊடே தூர்கம் பகுதியில் 70
காட்டு யானைகள் தஞ்சம் புகுந்துள்ளது.
எனவே, ராமபுரம், போடூர், பாத்தகோட்டா,
பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10 கிராம மக்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஆடு மாடுகளை கூட்டிக்கொண்டு
மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல
வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.

மேலும் யானைகள்
தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 70 யானைகள் கிராமத்திற்குள் நுழைந்திருப்பதால் பாதுகாப்பு அற்ற வீட்டினுள் இருப்பவர்கள் தனியாகவீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர், காட்டுயானைகள் தொடர்ச்சியாக ஊருக்குள் வருவதும் அதன்மூலம் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாகியுள்ளது.

Loading...

ஒற்றை காட்டு யானையை சமாளிப்பதே மிகுந்த சவாலான வேலையெனும்போது 70 காட்டுயானைகள் அடங்கிய கூட்டத்தை வனத்துறையினர் எவ்வாறு கண்டறிய போகிறார்கள் என்று மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது,

Loading...

10 கிராம மக்கள் முக்கியமாக இந்த எச்சரிக்கை தகவலை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending