Connect with us

#24 Exclusive

மாதவனின் அடுத்த படத்தில் இணைந்த வெளிநாட்டு பெண் பிரபலம்

நடிகர் மாதவன் தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கெட்டரி’. இந்த படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்னொரு பக்கம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை பிரபல சர்வதேச பாடகியான மேரி ஹாக்ஸ் என்ற பிரபலம் பாடியுள்ளார். இது குறித்த தகவலை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து சர்வதேச பிரபல பாடகி மேரி ஹாக்ஸ் அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் மேரி ஹாக்ஸ் பாடிய பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாதவன், சிம்ரன், ரஜித் கபூர், வின்செண்ட், மிஷா கோஷல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சூர்யா தமிழ் வெர்ஷனிலும், ஷாருக்கான் இந்தி மற்றும் ஆங்கில வெர்ஷனிலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையில் சிர்ஷா ராய் ஒளிப்பதிவில் பிஜித் பாலா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending