Connect with us

#24 Exclusive

திமுகவிற்கு விடுமுறைதின பரிசு கொடுத்த இந்துக்கள் ராஜேந்திர பாலாஜி அப்போது சொன்ன சாபம் பலித்தது !

Published

on

திமுகவிற்கு விடுமுறைதின பரிசு கொடுத்த இந்துக்கள் ராஜேந்திர பாலாஜி அப்போது சொன்ன சாபம் பலித்தது !

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகள் அடிப்படையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக + முன்னிலை வகித்து வருகிறது, அதிலும் குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை காட்டிலும் 6 வது சுற்று முடிவில் 12912 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார்.

எனவே விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக + வெற்றி பெரும் என்றே முதற்கட்ட முடிவுகள் கூறுகின்றன, இந்நிலையில் தமிழகத்தில் தேத்தலுக்கு சரியாக 3 நாட்கள் முன்பு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களை இழிவாக பேசியதாக கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை அடித்தனர்.

Loading...

ராஜேந்திரபாலாஜி பேசியதாக கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி பேசிய வார்த்தைகள் இன்று பலித்துவிட்டது என்றே கூறலாம்.

Loading...

நான் இஸ்லாமியர்கள் குறித்து எங்கும் தவறாக பேசவில்லை, நான் பேசியதாக கூறி எனது படத்தை செருப்பால் அடிக்கிறீர்களே அவர்களை பார்த்து கேட்கிறேன், நான் விஸ்வகர்மா (ஆசாரி ) எனும் சிறுபான்மையின சாதியில் பிறந்தவன் எனக்கு பலமே என்னுடைய கைதான், இன்று இந்துக்களில் உள்ள சிறுபான்மை சாதியினர் அமைதியாக இருப்பதால் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள், இப்போதே முடிவெடுத்திருப்பான் இனி வரும் காலங்களில் மதத்தினை வைத்து பிரச்சாரம் செய்த திமுகவிற்கு இந்துக்கள் ஒன்றிணைந்து பதிலடி கொடுப்பார்கள் அந்த காலம் தமிழகத்தில் வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போதுவரை தேர்தல் முடிவுகள் அதைத்தான் எதிரொலித்துள்ளன, சிறுபான்மையினரின் அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லிவந்த திமுக தலைமை இந்துக்களை புறக்கணித்தே வந்தது இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் நேரத்தில் சில தொலைக்காட்சிகளில் வருவது போன்று விடுமுறை தினம் வாழ்த்துக்களை திமுகவிற்கும், தீபாவளி கொண்டாட்டத்தை அதிமுகவிற்கும் கொடுத்துள்ளனர் தமிழக மக்கள்.

ராஜேந்திர பாலாஜியின் சாபம் இறுதியில் பலித்தது ! ஒன்றானது இந்துக்கள் வாக்கு வங்கி என்றே பலரும் பேசி வருகிறார்கள் !

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending