விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயம் பேக்கரி ஓனருக்கு ஒரு நியாயமா? உடனே கைது செய்யுங்கள் நீதிமன்றம் மூலம் அதிரடி !

நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர் என்றே சொல்லலாம், தாய் மொழியான தெலுங்கில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் விஜய் சேதுபதி.

Loading...

இந்நிலையில் விஜய் சேதுபதியின் சமீப கால நடவடிக்கைகள் அவரது மதிப்பை குறைத்து வருகின்றன, தொடர்ந்து இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவர் பேசி வருவது, அவருடன் நடித்த சக நடிகர்களையே எதிர்த்து கேள்வி கேட்க தூண்டியுள்ளது, மேலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து தீவிரவாதிகள் என்ன குரலில் பேசினார்களோ அதே மொழியில் பேசி வருகிறார் சேதுபதி.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியல்ல அது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும் அங்கு மக்களின் விருப்பத்தை அறிய வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று பல பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் பல காலமாக வலியுறித்தி வந்துள்ளன, இந்த நிலையில் விஜய் சேதுபதி ஆஸ்திரேலியா சென்றபோது அங்கு உள்ள வானொலி ஒன்றில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது…

Loading...

அதில் காஷ்மீர் மாநில மக்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் எனவும், ஒருவர் மீது அன்பு காட்டலாம் ஆளுமை காட்டமுடியாது என பேசியிருக்கிறார் அதாவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டது மாநிலம் பிரிக்கப்பட்டது குறித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் குரலில் பேசியிருக்கிறார்.

அந்த காணொளியும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது, இந்நிலையில் இந்து சாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜய் சேதுபதி மீது காவல்துறையில் பல்வேறு அமைப்புகள் தனி நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை காவல்துறை அவரை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை, அதுபோல் சென்னையில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் தனது கடையில் முஸ்லிம்கள் யாரும் வேலை செய்யவில்லை என குறிப்பிட்டுருக்கிறார்.

ஆனால் அவரை மறுநாளே கைது செய்த காவல்துறை பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது, தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் விஜய் சேதுபதியை கைது செய்யாத காவல்துறை, பேக்கரி உரிமையாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்ப படுகிறது.

விரைவில் விஜய் சேதுபதியை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் இல்லை என்றால் தமிழகத்தில் விஜய் சேதுபதி மதமோதலை உண்டாகிவிடுவார் எனவும் நீதிமன்றத்தை நாடா இருப்பதாக இந்து அமைப்புகள் தெரிவித்திருப்பது, நிச்சயம் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையை புரட்டி போடும் என்றே கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*