திருவள்ளுவர் சிலைக்கு காவித்துணியும், கருப்புத்துண்டும்

Loading...

கடந்த சில நாள்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது பிற மதத்தைச் சேர்ந்தவரா? அல்லது மதச்சார்பற்றவரா? என்ற ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி அவரை இந்துமத கடவுளாக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் இதற்கு திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த இரு தரப்பினர்களுக்கு இடையே நடைபெற்று வரும் சர்ச்சையில் சிக்கிய திருவள்ளுவர் பரிதாபமாக உள்ளார்

Loading...

இந்த நிலையில் திருவள்ளுவருக்கு பாஜக தரப்பில் மத சின்னங்கள் அணிவித்து அவருக்கு மத அடையாளம் கொடுக்கும் வகையில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி அவர்கள் இன்று காவி துண்டு அணிந்துள்ளார். அதுமட்டுமின்றி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிந்து தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது

இந்த நிலையில் பாஜகவின் இந்த செயல்களுக்கு பதிலடியாக திராவிட கட்சிகளின் ஆதரவாளர்கள் திருவள்ளுவரின் புகைப்படத்தில் அவருடைய உடைக்கு கருப்பு நிறம் பூசி, அவரை நாத்திகனாக்க முயற்சிக்கின்றனர். இந்த இரு தரப்பினர் திருவள்ளுவரை தயவு செய்து விட்டுவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*