Connect with us

#24 Exclusive

#BREAKING முதல் வெற்றியை பதிவு செய்தது இந்து மக்கள் கட்சி !! எங்கு தெரியுமா?

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று தொடங்கி இரவுமுழுவதும் எண்ணப்பட்டு தற்போது இன்று பகலிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன.

உள்ளாட்சி பகுதிகளில் கட்சி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு மக்களை தயார் செய்யமுடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை முக்கிய காரணியாக பயன்படுத்தி 2021 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தங்களுக்கு. ஆதரவான அடித்தளத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளும், அந்த வகையில் பெரும்பாலான ஊரக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றனர்.

அரசியலில் பல ஆண்டுகளாக உள்ள விடுதலை சிறுத்தை போன்றவை தற்போது வரை ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தை கூட பெறமுடியவில்லை, அதே நேரம் 11 ஆண்டுகளாக தீவிர அரசியலில் உள்ள நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 ஒன்றிய கவுன்சிலரை பெற்றுள்ளது, இந்த நிலையில் தீவிர இந்து மத கொள்கைகளை கொண்ட கட்சியான இந்து மக்கள் கட்சி தீவிர அரசியலில் சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டது இல்லை.

Loading...

ஆனால் இந்து மக்கள் கட்சியும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது, கோவை மாவட்டம் கள்ளபாளையம் 1 வது வார்டில் போட்டியிட்ட கவிதா கார்த்திகேயன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார், இதன் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்து மக்கள் கட்சி.

Loading...

திராவிட, தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற தீவிர அரசியலில் உள்ள இயக்கங்களே வெற்றியை பெற போராடிவரும் நிலையில் தன்னை இந்துக்களுக்கான இயக்கம் என்று முன்னின்று அறிவித்து செயல்படும் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருப்பது திராவிட கட்சிகளுக்கு சற்று அதிர்ச்சியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

குறிப்பு : இந்து மக்கள் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் வேட்பாளர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது

Loading...

Trending