Connect with us

#24 Exclusive

இமாச்சல் மாநிலத்தில் 10 அதிரடிகளுடன் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது ! மதம் மாற்றினால் என்ன தண்டனை தெரியுமா?

சிம்லா :-

இந்தியா முழுவதும் அடுத்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் மதமாற்றம் தடை சட்டம் அமலுக்கு வரும் என்று  செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முன் மாதிரியாக உறுதிப்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேச மாநில அரசு.

இந்தியாவில் தொடர்ந்து இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதனால் பல இடங்களில் குறிப்பாக பல வருடங்களாக நடைபெற்றுவரும் அந்த ஊர் திருவிழாக்கள் கூட கொண்டாட முடியாத நிலையில் பல கிராமங்கள் சென்றுவிட்டன, இவற்றிற்கு காரணம் சில குறிப்பிட்ட அமைப்புகள் வேண்டுமென்றே அடித்தட்டு மக்கள், விபத்தில் பாதிக்கப்பட்டோர், சமுதாய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை குறிவைத்து பணத்தை காட்டியோ அல்லது ஆசை வார்த்தை கூறியோ மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக குற்ற சாட்டு உள்ளது.

Loading...

இந்நிலையில் சில வெளிநாட்டை சேர்ந்த மிஷினரி அமைப்புகள் இந்தியாவின் பன்முக தன்மையை அழித்து, இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை கேரளா, காஷ்மீர் போன்ற மாநிலங்களை போன்று குறைத்து விட்டால் எளிதாக தங்கள் வசம் கொண்டுவந்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில்தான் ஹிமாச்சல் பிரதேச அரசு தங்கள் சொந்த கலாச்சாரம் மற்றும் மக்களை காப்பாற்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியது, இனி நினைத்த நேரத்தில் மதம் மாற முடியாது,  மதம் மாற வேண்டும் என்றால் உரிய காரணங்களுடன்  1 மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பிக்க வேண்டும் அவர் தெரிவித்த முடிவுகளின் அடிப்படையிலேயே மதமாற்றம்  பரிசீலக்கப்படும்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஒரு மதமாற்ற தடைச்சட்டம் உள்ளது .அந்தச் சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டதாகும்.அந்த சட்டவிதிகள் போதுமானவையாக இல்லை என்பதற்காக 2019ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச மத சுதந்திர சட்டம் இயற்றப்பட்டுள்ளது இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் இன்று இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

2019ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மசோதா தவறு செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்கிறது என மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்.

இம்மசோதா அவையில் விவாதிக்கப்படும் பொழுது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷாகுமாரி, சுக்விந்தர் சிங் நெகி, ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் ஒரே ஒரு மார்க்சிஸ்ட் உறுப்பினர் இருக்கிறார். அவரும் புதிய மத சுதந்திர மசோதாவுக்கு எதிராக அவையில் பேசினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் புதிய மத சுதந்திர சட்டம் தேவையா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்து பேசிய மாநில முதல்வர் 13 ஆண்டு காலமாக அமுலில் உள்ள அந்த சட்டம் பயனற்றது. அதற்கு பதிலாக 18 பிரிவுகளைக் கொண்ட புதிய விரிவான மசோதாவை இமாச்சலப் பிரதேச அரசு தாக்கல் செய்துள்ளது என கூறினார். பழைய சட்டத்தில் 8 பிரிவுகள் மட்டுமே உள்ளது என முதல்வர் தாக்கூர் தெரிவித்தார்.

ஹிமாசலப் பிரதேசத்தில் ராம்பூர், கின்னார் ஆகிய பகுதிகளில் மத மாற்ற ங்கள் அதிகரித்துள்ளன என முதல்வர் கூறினார்.

புதிய சட்டத்தின்படி மதம் மாற விரும்புகிற ஒருவர், மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தன்னுடைய மதமாற்ற எண்ணம் குறித்து ஒரு மாத அறிவிப்பு தரவேண்டும். மதமாற்றத்தை செய்து வைக்கும் மத ஊழியரும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு மாத முன்னறிவிப்பு தரவேண்டும். ஒருவர் தன்னுடைய தாய் மதத்துக்கு மீண்டும் மாறுவது என்றால் இத்தகைய முன்னறிவிப்பு எதுவும் தேவையில்லை என 2019ஆம் ஆண்டு மத சுதந்திர சட்டம் கூறுகிறது.

திருமணத்துக்காக மதம் மாற்றுவதை மசோதாவின் 5வது பிரிவு தடை செய்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் தலித்துகள் பெண்கள் சிறுவர்கள் ஆகியோரே வேறு மதத்திற்கு யாராவது மாற்றுவதற்கு முயற்சி செய்து 2019ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச மத சுதந்திர சட்ட விதிகளை மீறினால் அவர்களுக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டம் கூறுகிறது

இமாச்சல பிரதேசம் மத சுதந்திர சட்டத்தின் விதிகளை மீறுவோருக்கு நாட்டிற்கு வெளியே இருந்து பொருளையோ அல்லது பணத்தையோ நன்கொடையாக பெறுவதற்கு எந்த உரிமையும் இல்லை என 2019ஆம் ஆண்டு சட்டத்தின் பத்தாவது ஷரத்து தெளிவுபடுத்துகிறது என சட்ட அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்தார்..

குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 2019ஆம் ஆண்டு இமாச்சலபிரதேச மத சுதந்திரச் சட்டம் இனி ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் குறிப்பிட்ட தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அரசு அரசிதழில் அறிவிக்க வேண்டும்.

அரசு அறிவிக்கும் அந்த தேதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மத சுதந்திர சட்டம் அமலுக்கு வரும் என இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மேலும் 18 வயது நிரம்பாத மைனர் மற்றும் தலித் மக்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டுகள் முதல்  7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்றும் சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது,  மீண்டும் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடுவோருக்கு காலத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்க சட்டத்தை திருத்த  பரிசீலிக்கப்படும் என்று இமாச்சல் மாநில சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இனி குடும்பத்தினருக்கு தெரியாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை மதமாற்ற முடியாது. அப்படி மதமாற்றியது தெரியவந்தால் உடனடியாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்  எனவே கணிசமான அளவு மதமாற்றங்கள் குறையும் என்றும் தெரியவந்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இரண்டு மாதங்களில், முன் தேதியிட்டு மதம்மாற்ற தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்பதால் இப்போதே மிஷினரி கும்பல்கள் கவலையில் உள்ளார்களாம்.

Loading...

Trending