உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் தெரியுமா..? அதில் ஒரு இந்தியரும் இடம்பிடித்திருக்கிறார்

உலக அளவில் எந்த நடிகர் அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார் என்ற பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இதில் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் அக்சய் குமார் 4 வது இடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடிகர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்ற பட்டியலை “போர்ப்ஸ்” வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்தில் அதிகமாக சம்பாதித்த நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரபல ஹாலிவுட் நடிகர் டிவானே ஜான்சன் 650 கோடி ரூபாய் சம்பாதித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அடுத்ததாக தோர் கதாபாத்திரத்தில் நடித்த ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹோம்ஸ்வொர்த் 548 கோடி ரூபாய் சம்பளம் பெற்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

Loading...

அடுத்ததாக அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவ்னி 474 கோடி ரூபாய் சம்பளம் பெற்று பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய நடிகரும் , 2.O படத்தின் வில்லனுமான அக்சய்குமார் 467 கோடி ரூபாய் சம்பளம் பெற்று பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெற்றார். இந்த வரிசையில் ஜாக்கிசான் 420 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, அக்சய்குமாருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மேலும் இந்த வரிசையில் கேப்டன் அமேரிக்கா , ராக்கெட் போன்ற படத்தில் நடித்தவர்கள் டாப் 10 இடங்களில் உள்ளனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*