உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் பெண் நடிகர் இவர்தான்….

அமெரிக்காவின் ” போர்ப்ஸ் ” இதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலை வெளியிடுவார்கள். 3 நாட்களுக்கு முன்பு அதிக சம்பளம் பெற்ற ஆண் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டனர். அந்தப் பட்டியலில் இந்தியாவின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பிடித்திருந்தார்.

Loading...

தற்போது அதே “போபர்ஸ்” இதழ் உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில் முதல் இடத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சன் இருக்கிறார். இவர் லூசி, டான் ஜான் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்தவர். சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட ” அவஞ்சர்ஸ் ” படத்தில் நடித்தவர் இவர். இவரது தற்போதைய சம்பளம் 400 கோடி ஆகும். இவருக்கு அடுத்த படியாக சோபியா வெர்ஹரா இப்பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளார். இவரது தற்போதைய சம்பளம் 329 கோடியாகும்.

அதேபோல 250 கோடி சம்பளத்துடன் ஹாலிவுட் நடிகை ரீசி வித்தர்ஸ்பூன் 3 வது இடத்தில் உள்ளார். அடுத்த படியாக 243 கோடி ரூபாய் சம்பளம் பெற்று நிக்கோலே கிட்மேன் 4 வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த ” போபர்ஸ்” இதழ் இதுமட்டுமல்லாமல், உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்தும், பட்டியலிட்டும் வருகிறது.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*