Connect with us

#24 Exclusive

நடிகர் பிரகாஷ்ராஜ் க்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்….

பண மோசடி வழக்கில் பிரகாஷ்ராஜ் க்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழில் பிரகாஷ்ராஜ் நடித்து இயக்கிய படம் ‘உன் சமையல் அறையில்’ இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தியில் ரீமெக் செய்ய திட்டமிட்டார். அதன் படியே ஹிந்தியிலும் ‘தட்கா’ என்ற பெயரில் ரீமேக்கும் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்த படத்தில் டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Loading...

இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் ரூபாய் 5 கோடி வாங்கியிருந்தார். அந்தப் பணத்தை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து ஜூலை 15ம் தேதிக்குள் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முதல் தவணையாக பிரகாஷ்ராஜ் வழங்கிய 2 கோடிக்கான காசோலையில் பணம் இல்லாத காரணத்தால் செக் பவுன்ஸ் ஆகி திரும்பியுள்ளது. அதனால் நீதிமன்றம் பிரகாஷ்ராஜ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Loading...
Loading...

Trending