Connect with us

சிறப்பு அரசியல்

காணாமல் போனவர்களை மீட்க Helo ஏற்பாடு செய்துள்ள புது முயற்சி #தேடும்பொங்கல்

Published

on

சென்னை :- தமிழகத்தில் மிக பெரிய அளவில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன ஒரு பக்கம் ஜல்லிக்கட்டு மறுபக்கம் தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள் என அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

இது போல் வருகிற 17 ம் தேதி சென்னையில் மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும், மக்கள் மொத்தமாக வந்து கடற்கரையில் பொங்கல் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர், இந்த நேரத்தில் அதிகம் கூட்டம் காரணமாகவும் சில சமூகவிரோதிகளின் செயல்பாடுகளினால் குழந்தைகள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் நடைபெறும்.

Loading...

இதற்கு சென்னை காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள், அதே போல் சமூகவலைத்தளத்தின் முக்கிய செயலி helo குழுவினரும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளனர், அதன் ஒரு பகுதியாக #தேடும்பொங்கல் என்ற ஹாஷ்டாக் மூலம் காணாமல் போன குழந்தைகள் குறித்த விவரங்களை பதிவிட்டால் அவர்கள், குழந்தைகளை கண்டுபிடிக்க உதவுவதாகவும் அறிவித்துள்ளனர்.

Loading...

இதன்மூலம் பாதுகாப்பாக காணும் பொங்கலை கொண்டாட helo குழுவினரும் #தேடும்பொங்கல் மூலம் இணைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...

Trending