தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை!!

Loading...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 17 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளனர். அவை விழுப்புரம், கடலூர்,

நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை , ,புதுச்சேரி,, காரைக்கால், , தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது சென்னை வானிலை மையம் அறிவித்த தகவலின் படி, இன்று தமிழகத்தில்வளிமண்டல

Loading...

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மற்றும் தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளன.

மேலும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மட்டும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அவை வேலூர், விழுப்புரம், மற்றும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் ஆகும். மற்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில நகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*