கை, கால்களில் நரம்பு சுண்டி இழுக்கிறதா! அப்படினா உடனே இதை செய்யுங்கள்…

கை, கால்களில் நரம்பு சுண்டி இழுக்கிறதா! அப்படினா உடனே இதை செய்யுங்கள்…

Loading...

பெரும்பாலும் பெரியவர்களுக்கு இந்த நரம்பு சுண்டி இழுக்கும் பிரச்சனைகள் அதிகமாக வரும். இவை கை மற்றும் கால்களில் உள்ள நரம்பு திடிரென சுருக்கென்று சுண்டி இழுக்கும். இதற்கான காரணங்கள் சியாட்டிக்கா ஆகும். இந்த சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர் ஆகும். இந்த சியாட்டிக்கா முன்பெல்லாம் இந்த பிரச்சனை பெரியர்களுக்கு மட்டும் தான் ஏற்படும்.

ஆனால் இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. சியாட்டிக்கா என்ற நரம்பு பாதிக்கப்படுவதால் தான் தசை பிடிப்பு மற்றும் நரம்பு சுண்டி இழுத்தல் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நரம்பு தான் கால்களின் தசைகள் அசைவதற்கு முக்கிய காரணம்.

Loading...

தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதனால் இவ்வாறு வலி ஏற்படும். இதற்கான நிவாரணி என்னவென்றால், சூடான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, ஒரு காட்டன் துணியினால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் இந்த வலி குறைய ஆரம்பிக்கும். அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு மூன்று ஸ்பூன் அளவு வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து பின்பு காலையில் அதை கொதிக்க வைத்து குடித்து வந்தால் நரம்பு சுண்டி இழுப்பது விரைவில் குணமடையும்.

ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் முழுமையான ஒரு பல் பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். அது நன்றாக கொதித்து ஒரு டம்ளர் அளவுக்கு வற்றிய பின்பு இரவு நேரத்தில் அதனை பருகி வந்தால் நரம்பு சுண்டி இழுப்பது குணமடையும். அல்லது

முளை கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் இதனை சரிசெய்யலாம். உடலில் கை மற்றும் கால் நரம்புகள் வலி எடுக்கும் போது, தேங்காய் எண்ணெயில் பச்சை கற்பூரத்தை சேர்த்து சூடு செய்து வலி உள்ள இடத்தில் தடவி வரலாம். இது ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனையிலிருந்து விரைவில் நலம்பெறலாம். அல்லது தினமும் அதிகாலையில் சூரிய ஒளி படும் படி சிறிய உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் கை, கால்களுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். சிறு வயதிலே நரை முடி பிரச்சனை இருக்கிறதா? இதோ அருமையான தீர்வு!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*