தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தான்!

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தான்!

Loading...

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதுவரை தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் தேசிய தலைவர் அமிட்ஷா பொறுமை காத்து வந்தார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர், கட்சியின் முன்னணி முகமாக இருப்பதுடன் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இன்றி அனைத்து தரப்பினரையும் அனுசரித்து போகக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதில் டெல்லி தலைமை உறுதியாக இருந்தது.

Loading...

தற்போது தமிழகத்தை பொறுத்தவரை புதிய தலைவர்கள் போட்டியில் பாஜக தேசிய செயலாளர் H. ராஜா, பேராசிரியர் ஸ்ரீனிவாசன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் A.P.முருகானந்தம் ஆகியோர் இருந்தனர். இதில் தற்போது மூவர் மட்டுமே கடைசி போட்டியில் இருப்பதாக தெரியவந்துள்ளது, அதில் H.ராஜா, ஸ்ரீனிவாசன் மற்றும் AP முருகானந்தம் ஆகியோர் தலைவர் பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.

இதில் மூவரில் ஒருவருக்குத்தான் தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என்றும் தமிழக ஆர் எஸ் எஸ் மற்றும் மூத்த தலைவர்கள் மதுரையை சேர்ந்த மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை பரிந்துரைத்திருப்பதாகவும், அதே நேரம் முன்னாள் நிர்வாகிகள் சிலர் நயினார் நாகேந்திரனை பரிந்துரைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ தற்போதைய நிலையில் தமிழக பாஜக தலைவராக H ராஜா, ஸ்ரீனிவாசன், AP முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தேர்தெடுக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் அறிவிக்கப்படும் நேரத்தில் தமிழக பாஜக தலைவர் பெயரும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*