” ஹார்லி டேவிட்ஸன் ” நிறுவனம் அறிமுகப்படுத்திய பேட்டரி மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சங்கள்….

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் தான். அந்த நிறுவனமானது தனது முதலாவது பேட்டரி மோட்டார் சைக்கிள் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேட்டரி மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கப்போவதாக அறிவித்தது. சரியாக ஒரே ஆண்டுக்குள், பேட்டரி மோட்டார் சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Loading...

ஹார்லி டேவிட்ஸன் என்பது பிரிமியம் பிராண்ட். இதில் பேட்டரி வாகனமும் பிரிமியமாக தயாராகியுள்ளது. இதன் விலை மட்டும் 30000 டாலர்களாகும். பொதுவாக மற்ற மோட்டார் சைக்கிளின் விலையை விட ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்கள் விலை சற்றே அதிகமாகத்தான் இருக்கும். இதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த மோட்டார் சைக்கிள், இறக்குமதி வரி உட்பட, இதன் விலை ஏறக்குறைய 32 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோட்டார் 105 ஹச்.பி.திறன் கொண்டதாகும், 116 நியூட்டன் மீட்டர் இழுவிசையை கொண்டது . வண்டியை ஸ்டார்ட் செய்த 3 வினாடிகளில் 100 கி.மி. வேகத்தை எட்ட முடியும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு 13.7 கிலோவாட் ஆகும், இதில் டி.சி. பாஸ்ட் சார்ஜை பயன்படுத்தினார், 1 மணி நேரத்திற்குல் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 153 கி.மி வரை பயணம் செய்ய முடியும்.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*