Connect with us

#24 Exclusive

ப்ரியா பவானிசங்கருக்கு பிரியாணி விருந்து வைத்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே திரையுலகில் வெற்றி பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ மற்றும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது அடுத்து தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனக்கு பார்ட்டி வைக்குமாறு பிரியா பவானிசங்கர் கூறியதாகவும் அதனை ஏற்று தனது வீட்டில் செய்த பிரியாணியை ஹரிஷ் கல்யாண் எடுத்து வந்ததாகவும் அந்த பிரியாணியை பிரியா பவானி சங்கர் மட்டுமன்றி படக்குழுவினர் அனைவரும் சாப்பிட்டு படப்பிடிப்பு நிறைவு தினத்தை கொண்டாடியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஹரிஷ் கல்யாண் உடன் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படம் ரொமான்ஸ் கலந்த த்ரில்லர் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இருவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாகவும் வரும் மே மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் நடித்த ’தாராள பிரபு’ என்ற படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending