Connect with us

Uncategorized

ஹரே பாய் உங்க போராளி குரல் இதற்கெல்லாம் கிடையாதா? இயக்குனர் மீது சாணியடித்த திரௌபதி இயக்குனர் !!

மூடர்கூடம் திரைப்படத்தின் இயக்குனர் முகமதலி மீண்டும் திரௌபதி இயக்குனரிடம் சிக்கியிருக்கிறார், இந்த முறை ஹரே பாய் இதற்கெல்லாம் பொங்க மாட்டீர்களா என ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் !

கடந்த மாதம் திரௌபதி படத்தின் ட்ரைலர் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, காலம் காலமாக காதலை மையப்படுத்தி தமிழில் திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் முதல்முறையாக நாடாக காதலை எதிர்த்து ஒரு படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது, அதிலும் குறிப்பாக பல தரப்பிலும் ஆதரவுகள் பெருகியது.

இது ஒருபுறம் இருக்க அனைத்து திரைப்படங்கள் குறித்தும் கருத்து சொல்லும் மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் முகமதலியிடம் இளைஞர் ஒருவர் ட்விட்டரில் tag செய்து திரௌபதி ட்ரைலர் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என கேட்க அதற்கு மிகவும் தலை கனத்துடன் குப்பைகள் குறித்து நான் கருத்து சொல்வதில்லை என குறிப்பிட்டுருந்தார், இந்நிலையில் அப்போதே பலரும் அவருக்கு பதிலடி கொடுத்தனர், தனது மூடர்கூடம் படத்தில் 10 வயது சிறுமிக்கு தன் மீது காதல் வரும்படி இயக்கிய இயக்குனரிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என பதிலடி கொடுத்தனர்.

Loading...

இயக்குனர் மோகன் நாடக காதலால் ஒரு சாதி மட்டுமல்ல பலரும் பாதிக்க படுகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார் இந்நிலையில் தற்போது ஆம்பூர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவன் 17 வயதான இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கற்பமாக்கிவிட்டு தலை மறைவு ஆகிவிட்டான் அவன் மீது காவல்நிலையத்தில் புகார் அழைத்த அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Loading...

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மீண்டும் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளனர், தற்போது இதனை சுட்டி காட்டி மோகன் நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? “ஹரே @NaveenFilmmaker பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்..” என வசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கருத்திற்கு பலரும் சரியான சாணி அடி என ஆதரவு தெரிவித்து வருகின்றனர், தற்போதுவரை முகமது அலி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending