காதலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா! ரசிகர்கள் அதிர்ச்சி!

காதலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா! ரசிகர்கள் அதிர்ச்சி!

Loading...

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா தனது காதலி கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடி ஆட்டம் போலவே பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பெண் தோழிகள் மற்றும் ஓய்வறைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அதன் பின் முதுகுவலி காரணமாக 6 மாதத்துக்கு மேலாக ஓய்வில் இருக்கும் அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பும் முனைப்பில் இருக்கிறார்.

Loading...

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஹர்திக் பாண்ட்யா, தனது காதலியான நடாஷா இவான்கோவிச்சை துபாயில் உள்ள கப்பல் ஒன்றில் வைத்து நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இது சம்மந்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தில் இருவரின் குடும்பத்தினர் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை. மேலும் ஹர்திக் பாண்ட்யாவின் குடும்பத்தினருக்கே இந்த திருமணம் பற்றி எதுவும் தெரியாது என அவரது தந்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது கர்ப்பமாக இருக்கும் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாண்ட்யா. நிச்சயதார்த்தத்துக்குப் பின் அவர்களுக்கு திருமணம் நடந்ததாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இந்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் பாண்ட்யா தம்பதியினருக்கு வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*