ஐபிஎல் தொடரில் விக்கெட் வீழ்த்த முடிந்தால்… இந்திய அணிக்காக வீழ்த்த முடியாதா? 38 வயது பந்து வீச்சாளரின் கேள்வி!

ஐபிஎல் தொடரில் விக்கெட் வீழ்த்த முடிந்தால்… இந்திய அணிக்காக வீழ்த்த முடியாதா? 38 வயது பந்து வீச்சாளரின் கேள்வி!

Loading...

இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தான் மீண்டும் இந்திய அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர் ஹர்பஜன் சிங். தனது 18 ஆவது வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாடி103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதே போல ஒரு நாள் போட்டிகளிலும் 237 போட்டிகளில் 269 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Loading...

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் விக்கெட்களையும் கைப்பற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் இந்திய அணிக்காக விளையாட இப்போதும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ’என்னால் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக பந்து வீச முடிகிறது. உலகின் டாப் பேட்ஸ்மேன்களை எனது பந்துவீச்சால் வீழ்த்தி உள்ளேன். அப்படியானால் ஏன் இந்திய அணிக்காக விளையாட முடியாது. இந்திய அணியில் ஆடுவது எனது கையில் இல்லை. ஒரு வேளை எனக்கு வயதாகி விட்டதாக தேர்வுக்குழுவினர் நினைக்கலாம். ஆனால் நான் இப்போதும் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தற்போது 39 வயதாகும் ஹர்பஜன் சிங் இன்னும் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. ஆனாலும் அவர் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது எட்டாக்கனிதான் என கருதப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*