Connect with us

#24 Exclusive

ஹர்பஜன் தமிழில் சொன்ன குட்டி ஸ்டோரி . தளபதி பாணியில் கொரோனா விழிப்புணர்வு .

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் . இந்தியாவில் தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ள நிலையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதன் ஒரு பகுதியை இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியா பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார் .

இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது . இந்த ஊரடங்கு என்பது கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் ஊரடங்கை விட மிக தீவிரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி . இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் ஆனால் பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே மேலானது என்றும் கூறியுள்ளார்

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்
Let me tweet a குட்டிstory,Pay attention listen2 @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக #StayAtHomeSaveLives @CMOTamilNadu @Vijayabaskarofl

Loading...

என்று தளபதி விஜய்யின் மாஸ்டர் பட பாடல் பாணியில் கொரோனா விழிப்புணர்வு செய்ததுடன் அதில் தமிழக முதல்வரையும் , தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் டாக் செய்துள்ளர் . பஞ்சாபியான ஹர்பஜன் சிங் தமிழ் மீது கொண்ட பற்றால் அடிக்கடி தமிழில் ட்வீட் போடுவது வழக்கம் . அதுபோலவே இந்த டீவீட்டையும் போட்டுள்ளார்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending