Connect with us

முகப்பு

சார் எங்க ஊருல திட்டுறாங்க சார் ஏதாச்சும் பண்ணுங்க சார் கதறிய வசந்தகுமார் -கை கொட்டி சிரித்த சக எம் பி கள் வீடியோ வெளியானது இதற்கு பெயர் தான் நாடாளுமன்றத்தை கதறவிடுவதா?

தமிழகத்தில் இருந்து சென்ற 38 எம் பி கள் நாடாளுமன்றத்தை கதறவிடுவார்கள் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கூறின, மேலும் தமிழக ஊடகங்களும் மிக பெரிய அளவில் சிங்கப்பெண்ணே, சிங்கங்களே என பாடல்களை மேற்கோள் காட்டி தமிழகத்தை சேர்ந்த 38 எம் பி களை புகழ்ந்து தள்ளினர்.

இந்த சூழலில்தான் திமுக + எம் பி கள் நாடாளுமன்றத்தை அலறவிடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது, டி ஆர் பாலு, கனிமொழி, ஆ ராசா என பாஜக எம் பி களிடம் ட்ரோல் வாங்கிய நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகியோர் தூங்கி விழுந்ததை தொடந்து ட்ரோல் செய்யபட்டனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் H வசந்தகுமார் நாடாளுமன்றத்தில் தொகுதி நிலவரம் குறித்து பேசிய சம்பவம், இந்திய அளவில் மிக பெரிய அளவில் ட்ரோல் செய்யபட்டு வருகிறது, நாடாளுமன்றத்தில் பேசிய அவர் சார் எங்க ஊரில் நெடுஞ்சாலைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மக்கள், மாணவர்கள் என எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள் சார்,

Loading...

என்னை திட்டுகிறார்கள் என்னிடம் கேட்கிறார்கள் ஏதாவது செய்யச்சொல்லுங்கள் சார் என சொல்ல சொந்த கட்சி எம் பி களே சிரித்துவிட்டார்கள், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் சிரித்துவிட்டார், அனைவரும் சிரித்ததற்கு காரணம் மக்களுக்கு பாதிப்பு என்றால் எம் பி யிடம் கேள்வி எழுப்ப மாட்டார்களா என்று சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டல் உள்ளாகியுள்ளது.

Loading...

ஏற்கனவே நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டதாக மக்கள் போராடிய நிலையில் வசந்தகுமார் நெடுஞ்சாலைகளில் பஞ்சர் ஒட்டி நிவர்த்தி செய்தார் என பள்ளங்களை தற்காலிகமாக அடைந்ததை தொகுதி மக்கள் கிண்டல் செய்தனர், இந்நிலையில் எங்கள் எம் பி நாடாளுமன்றத்தை எப்படி கதறவிடுகிறார் என பாருங்கள் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending