Connect with us

அரசியல்

வேரோடு சாய்க்க வாருங்கள் ! எந்த பாஜக தலைவரும் செய்யாத செயலுக்கு அழைப்பு விடுத்தார் H ராஜா !

Published

on

சமூகவலைத்தளம்.,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமுருகன் காந்தி போன்ற பிரிவினைவாதிகளை வேரோடு நீக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் H ராஜா.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததே நாங்கள்தான் என்று பெருமையாக பேசியிருந்தார், இந்த நிலையில் பலரும் அவருக்கு கண்டனத்தை பதிவு செய்து வந்த சூழலில் பாஜகவில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலர் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்காமல், எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

எப்போதும் தொடர்ந்து நாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் முதல் நபராக எதிர்ப்பு தெரிவித்துவரும் H ராஜா இந்த முறை சீமான் போன்றோர் ஒட்டு பிச்சை எடுப்பதாக கடுமையாக விமர்ச்சித்துள்ளார். மேலும் இதுவரை சீமான் இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பேசியபோது வாயை மூடி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் இப்போது கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியினையும் நேரடியாக எழுப்பியுள்ளார்.

அத்துடன் சீமான், திருமுருகன் காந்தி போன்ற தேச விரோதிகளை உடனடியாக வேரோடு சாய்க்க வாருங்கள் என்றும் H ராஜா அழைப்பு வீடியோ மூலம் விடுத்துள்ளார் . தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் சீமான் விவகாரத்தில் அமைதியாக இருந்துவரும் நிலையில் முதல் நபராக கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார் H ராஜா.

H ராஜா எச்சரிக்கை விடுத்த விடீயோவினை பார்க்க !

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share