Connect with us

சினிமா

ஒருவழியாக ரிலீஸாகும் ஜீவாவின் படம் – திருப்புமுனையாக அமையுமா ?

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகனின் மூன்றாவது திரைப்படமான ஜிப்ஸி மார்ச் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரான ராஜு முருகன் குக்கூ திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் தேசிய விருது பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து அவர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதற்குக் காரணம் இந்த திரைப்படத்தில் பேசப்படும் அரசியல் என சொல்லப்பட்டது. வட இந்தியாவில் எழும்பி வரும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இப்படத்தில் சில காட்சிகள் இருப்பதால் சென்சார் தரப்பில் பல தடைகள் என செய்திகள் வெளியாகின. பின்னர் ஒருவழியாக சென்சார் பிரச்சனைகளையும் முடித்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

Loading...

ஆனால் என்ன காரணத்தினாலோ இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதையடுத்து இப்போது மீண்டும் மார்ச் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நீண்ட காலமாக ஒரு வெற்றி படத்திற்காக காத்திருக்கும் நடிகர் ஜீவா இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending