Connect with us

#24 Exclusive

தமிழகத்தின் கலாசாரத்தை இரு கட்சிகளும் சீரழித்துவிட்டன: துக்ளக் குருமூர்த்தி

மதுரையில் நேற்று துக்ளக் பத்திரிகையில் 50வது ஆண்டுவிழா நடந்தது. இந்த விழாவில் துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டரும், பாஜக ஆதரவாளருமான எஸ் குருமூர்த்தி அவர்கள் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:

தமிழக கலாச்சாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இரு கட்சிகளும் சீரழித்து விட்டது என்றும், திராவிட பாரம்பரியம் என்பது தமிழகத்தில் இல்லை என்றும், வெறும் பெயரளவில் அரசியலில் மட்டுமே திராவிட பாரம்பரியம் என்ற வார்த்தை இருப்பதாகவும், திராவிட கலாச்சாரத்தை தமிழகம் அறவே ஒதுக்கி விட்டதாகவும் அவர் கூறினார்

இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து காரணம் மரியாதையை குறைத்து உரிமையை அதிகப்படுத்த வேண்டும் என்று பேசுவது தான் என்றும், இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவை விட அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்தாலும் அது அங்கு செய்தியாக இல்லை என்றும் இந்தியாவில் மட்டுமே பெரிதுபடுத்தப்படுவதாகவும் துக்ளக் ஆசிரியர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Loading...

தமிழகம் பாரதத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும், அந்த அளவிற்கு கலாச்சாரம் தமிழகத்துக்கு தேவை என்றும் கூறிய துக்ளக் ஆசிரியர், தமிழ்நாட்டு மக்களை போல் நல்லவர்கள் கிடையாது என்பது என்னுடைய அகில இந்திய அளவுகோல் என்று கூறினார்

Loading...

மேலும் தமிழ்நாட்டை மாற்றிய பெருமை எம்ஜிஆருக்கு தான் உண்டு என்றும், கோவிலுக்கு போவதை அறிவித்துவிட்டு போனவர் எம்ஜிஆர் என்றும் பேசிய குருமூர்த்தி, சிறைக்கு போய் விட்டு ஒருவர் வெளியே வந்தால் கூட என் மீது குற்றமில்லை, என்னை அவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் என்னை சிறையில் பிடித்து போட்டு விட்டனர் என்று சொல்கின்றனர் என்று ப.சிதம்பரத்தை மறைமுகமாக தாக்கினார்.

மேலும்தி விபிசிங்கை கைவைத்து இராஜீவ் காந்தியை பதவியை விட்டு நீக்கும் முயற்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈடுபட்ட போது அதில் எனது பெரும் எனக்கு உண்டு என்று தெரிவித்த துக்ளக் ஆசிரியர், பணம் அதிகாரம் புகழ் பெயர் இவற்றை எதிர்த்து தான் துக்ளக் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

துக்ளக் ஆசிரியரின் இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சீரழித்தது இரு திராவிட இயக்கங்கள்தான் என குருமூர்த்தி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை என்றும் அது நன்றாகவே தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending