NEWS18 – ல் இருந்து வெளியேறினார் குணசேகரன் புதிய முதன்மை ஆசிரியர் நியமனம் ! 12 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் !

ஊடகங்களளை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்வதாக NEWS18 நெறியாளர்களான குணசேகரன் செந்தில் ஆகியோர் மீதும் புதிய தலைமுறையில் பணியாற்றும் கார்த்திகேயன், கார்த்திகை செல்வன் ஆகியோர் மீதும் பொதுவெளியில் குற்றசாட்டு வைக்கப்பட்டது, நாளடைவில் அது போராட்டமாக வெடித்தது.

Loading...

NEWS18 நிர்வாகம் குணசேகரன், செந்தில் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்தது, செந்தில் ஒப்பந்தம் முடிவடைய இரண்டு மாதங்கள் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை தற்போது எடுக்கப்படவில்லை என்றும் குணசேகரன் விவாத தலைப்பை தீர்மானிக்கும் அனைத்து பொறுப்பிலும் இருந்து நீக்கப்பட்டு நெறியாளராக மட்டும் செயல்படுவார் என கூறப்பட்டது.

மேலும் ஹாசிப் என்ற நபர் நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின, இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்துவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து NEWS18 தமிழ்நாடு பிரிவு அதிகார பூர்வ முற்றுப்புள்ளி வைத்துள்ளது, news 18 தரப்பில் இருந்து குணசேகரன் நிகழ்ச்சியை தீர்மானிக்கும் பொறுப்பை கொடுக்காததால் இன்று தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் குணசேகரன்.

Loading...

அவர் சத்தியம் செய்திகளில் பணியாற்ற போவதாக கூறப்படுகிறது, இதற்கு இடையில் செந்திலும் விலகுவார் எனவும் news18 தமிழ்நாடு தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை கலக்கிய முக்கிய தலைமை செய்தியாளர் ஒருவருடன் நிர்வாகம் 75% பேச்சுவார்த்தை முடித்துவிட்டதாகவும் விரைவில் புதிய குழுவினருடன் வர இருக்கிறதாம் news18 நிர்வாகம்.

குணசேகரன் பதவியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இடதுசாரிகள், மற்றும் திமுக ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*