மகா மட்டமான தமிழ் சமூகத்திலா இத்தனை நாள் வாழ்ந்தோம் இந்துக்கள் என்றால் குரல் கொடுக்க மாட்டீர்களா கண்ணீர் விட்டு கதறும் தந்தை ! எங்கே நடுநிலைவாதிகள் !

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை எஸ் பி ஆபீஸ் அருகே உள்ளது குழந்தை யேசு பள்ளி இப்பள்ளியில் 11 வகுப்பு படித்த பள்ளி மாணவி ஆசிரியரின் கொடுமையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Loading...

பாளையம்கோட்டையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவி கீதா ( பெயர் மாற்றம் ) கடந்த குடியரசு தினவிழா அன்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ள தனது குடும்பத்தினருடன் குடியரசு தினவிழாவினை கொண்டாடியுள்ளார், இந்நிலையில் குடியரசு தினவிழாவில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்பது அரசாங்க விதி அப்படியிருக்கையில் பள்ளி நிர்வாகம் சிறப்பு வகுப்பினை வைத்துள்ளது.

அதில் பங்கேற்காத மாணவி கீதாவினை ஆசிரியர் பள்ளியில் கண்டித்ததுடன் தவறாக பேசியுள்ளார், இதில் மனமுடைந்த பள்ளி மாணவி சீருடையுடன் தற்கொலை செய்து கொண்டார், இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், மேலும் குடியரசு தினவிழாவில் சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளி நிர்வாகம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், எனது மகளையும் கொலை செய்து விட்டார்கள் என கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Loading...

கடைசியில் பெண்ணின் தந்தை நாங்கள் பாதிக்கபட்டால் தவறு செய்தவன் கிறிஸ்தவன் என்றால் யாரும் கேட்கமாட்டீர்களா எனவும் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் யாரு தவறு செய்தாலும் கேட்க வேண்டியது அனைவரின் கடமை ஆனால் எந்த ஊடகமும் நான் பேட்டி கொடுத்து இதுவரை செய்தியை வெளியிடவில்லை, ஏன் சார் நாளை உங்க வீட்டிலும் இதே போல் பிள்ளையை பறிகொடுத்தால் இப்படித்தான் மூடி மறைப்பீர்களா என்று கதறிய சம்பவம் கூடிஇருந்தவர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.

எங்கோ டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு சிறப்பு விவாதம் நடத்தும் ஊடகங்கள் நம் தமிழகத்தை சேர்ந்த பிஞ்சு குழந்தையின் உயிர் போனதற்கு இதுவரை வாய் திறக்காமல் இருப்பது, மக்கள் மத்தியில் ஊடகங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் இதுபோன்று கிறிஸ்தவ பள்ளியில் நடைபெறும் கொடும் செயல்களை மூடி மறைப்பதாக குற்றம் சாற்ற பட்டு வருகிறது.

தவறு செய்த பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக இந்திய சட்டத்தின் படி தண்டனை கொடுக்கவேண்டும் என்றும் நாளை என் மகளை நான் பறிகொடுத்தது போல் வேறு யாருடைய குழந்தையும் பலியாகக்கூடாது எனவும் அது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி என வேதனையுடன் கூறியுள்ளார் பெண்ணின் தந்தை.

தமிழகத்தில் போலி நடுநிலை பேசும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவத்திற்கு குரல் கொடுப்பார்களா? இல்லை வெளிமாநிலத்தில் ஏதேனும் தவறு நடந்தால்தான் வாய் திறப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*