சிறு வயதிலே நரை முடி பிரச்சனை இருக்கிறதா? இதோ அருமையான தீர்வு!

சிறு வயதிலே நரை முடி பிரச்சனை இருக்கிறதா? இதோ அருமையான தீர்வு!

Loading...

இன்றய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட நரை முடி தோன்றி விடுகிறது. இவை உடலில் மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி தோன்றுகிறது. இவை ஏற்படுவதால் சிலருக்கு மனத்தாழ்வு ஏற்பட காரணமாகிறது. இந்த நரை முடி இளம் வயதினர் மட்டுமின்றி ஆண் மற்றும் பெண்,என அனைவரும் இந்த பிரச்சனையிலுருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு உள்ளது. அதுவும் நமது வீட்டில் இருந்தபடியே எளிமையான

முறையில் சரிசெய்து விடலாம்.இதற்கு முக்கியமான பொருள் ஆன பீர்க்கங்காய். மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றான பீர்க்கங்காய் ஆகும். இவற்றில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன மற்றும் வைட்டமின்கள் ‘A’, ‘B’, ‘C’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் நீரிழிவு பிரச்சனைகள் குறையும். இருப்பினும் நாம் இந்த பீர்க்கங்காயை சாதாரணமாக நினைத்து சாப்பாட்டு வகையிலிருந்து இதனை ஒதுக்கி விடுவோம்.

Loading...

இந்த பீர்க்கங்காயில் மருத்துவ குணங்கள் நிறைய இருப்பதால் மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும். அதுமட்டும் இல்லாமல் இவை தலை முடியை கருமை ஆக்குவதில் இது சிறந்த பங்காற்றுகிறது.இயற்கை முறையில் பீர்க்கங்காயை பயன்படுத்தி கருமை நிற முடி பெற சிறந்த வழிகள் உள்ளன. அவை:

ஒரு பீர்க்கங்காயை எடுத்து நன்கு கழுவி துண்டு துண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் காயவைக்க வேண்டும். இவற்றை முக்கியமாக சூரிய ஒளியில் அல்லாமல் நிழலினில் இதனை காயவைத்தல் வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளி படுவதினால் இதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும். எனவே இதனை நிழலிலேயே காயவைத்தல் நல்லது. ஐந்து நாட்கள் காய்ந்த பிறகு

இதனை ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதன்பின் அதனுடன் தேங்காய் எண்ணையை பாட்டிலில் உள்ள பீக்கங்காய் மூழ்கி ஊரும் அளவிற்கு எண்ணை ஊற்ற வேண்டும். பின்பு காற்று புகாதவாறு அந்த பாட்டிலை மூடி வைத்து விடவும். இவை குறைந்தது இரண்டு நாட்களுக்கு அந்த எண்ணெயில் பீக்கங்காய் ஊரும் வரை அதனை தொட கூடாது. இரண்டு நாட்களுக்கு பின் அந்த

எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும்.எண்ணை நன்றாக கொதித்து வரும் அளவிற்கு காய்ச்சவும். இந்த பீர்க்கங்காயில் வைட்டமின்A,B,C உள்ளதால், இது முடியை கருப்பாக மாற்றும் தன்மை கொண்டது. அந்த பீர்க்கங்காய் நன்றாக சுருகி வரும்வரை எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெயின் நிறம் நன்றாக மாறிவிடும். இப்போது இந்த காய்ச்சிய எண்ணெய் ஆறியவுடன் அதனை வடிகட்டி அந்த பாட்டிலில் ஊற்றி மூடி

வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெய்யை வாரத்தில் மூன்றுநாட்கள் உபயோகப்படுத்தி வந்தால் உங்களது நரை முடியை கருப்பாக மாற்றுவது மட்டுமின்றி பேன் மற்றும் பொடுகு தொல்லையையும் நீக்குகிறது. மற்றும் இனி எப்போதும் உங்கள் முடி கருமை நிறமாக தான் இருக்கும். இந்தியாவை பார்த்து சட்டத்தை மாற்றிய சீன அதிபர் ! உலகம் முழுவதும் பரவிய இந்தியாவின் புகழ் !!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*