கொரோனாவால் ஜெ அன்பழகனுக்கு உதவத் தயார்! சென்னை மண்டல அதிகாரி தகவல்!

கொரோனாவால் ஜெ அன்பழகனுக்கு உதவத் தயார்! சென்னை மண்டல அதிகாரி தகவல்!

Loading...

திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக ஜெ அன்பழகனுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான கெ.அன்பழகன். இவரது வீட்டில் அவர் தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். இந்நிலையில் மக்கள் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Loading...

அங்கு அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதை அடுத்து வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அவருக்கு உதவிகள் தேவைப்படின் அதை அரசு செய்யும் எனக் கூறியுள்ளார். மேலும் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக ஜெ அன்பழகன் உள்ளார்.

அவர் விரைவில் குணமாகி வர அவரது கட்சித் தொண்டர்கள் பிராத்தித்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*